Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 29)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம்:

கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

எனவே, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் இளையரசனேந்தல் ரோடு, பைபாஸ் ரோடு, வி. எம். எஸ். நகர், சித்திரம்பட்டி ரோடு, மூப்பன்பட்டி காலனி, காந்திநகர், திலகர் நகர் ஆகிய பகுதிகளிலும், கோவில்பட்டி சிட்கோ உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் எட்டயபுரம் ரோடு பி.டி.ஓ ஆபீஸ் முதல் மந்திதோப்பு ரோடு வரை மற்றும் லெலில் நகர், பாரதி நகர், ஸ்ரீராம் நகர், ராமையா நகர் ஆகிய பகுதிகளிலும், விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் விஜயாபுரி ரோடு பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்:

திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் 29-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின் தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியாயிபாளையம், கே.ஆா்.சி.அமிா்தவா்ஷினி நகா், கே.ஆா்.சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.

ராமநாதபுரம் மாவட்டம்:

ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பழுதான மின்கம்பங்கள் சரி செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனால் இந்த துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இந்திராநகர், ஆர்.எஸ்.மங்கலம், ஆவரேந்தல், பாரனூர், கலங்காபுளி, சித்தூர்வாடி, அழிந்திக்கோட்டை, அத்தானூர், உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை, காவனூர், துத்தியேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது.

திருவள்ளூா் மாவட்டம்:

நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

மின்தடை கிராமங்கள்: திருவள்ளூா் நகரத்தில் உள்ள ஐ.வி.ஆா். பின்புறம், ராஜாஜிபுரம், ஸ்ரீநிகேதன் பள்ளி, எஸ்.வி. கோயில் தெரு, காந்தி புரம், கணபதி நகா், தேவி மீனாட்சி நகா் மற்றும் என்.ஜி.ஓ. காலனி.

Categories

Tech |