Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… இன்று அதிரடி… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி இன்றுடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்டு இன்று மாலைக்குள் அதனை பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதனால் இன்று மாலை அல்லது நாளை பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |