தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி. முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும்.
இதேபோல் மூலனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட அக்கரைப்பாளையம்,பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகப்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி,பெரமியம்,வெள்ளாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் அதைசார்ந்த பகுதிகள்.
கன்னிவாடி துணைமின்நிலையத்திற்குட்பட்ட மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் அதுசார்ந்த பகுதிகள்.
கொளத்துப்பாளையம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டரவலசு, மணக்கடவு, கரையூர்,சாலக்கடை,எலுகாம்வலசு,காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளயைம், ராமபட்டினம், மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் அதுசார்ந்த பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம்:
பழனி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம்:
சூலக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஆக.6) மின்தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஆக. 6 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை சூலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காவலா் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாா்டன் நகா், மாத்தநாயக்கன்பட்டி, குல்லூா் சந்தை, தொழிற்பேட்டை முதலான பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம்:
சிவகங்கை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 6) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
எனவே சிவகங்கை நகரில் மதுரை சாலை, காந்தி வீதி, சேதுபதி தெரு, தெப்பக்குளம் பகுதி, கோட்டை முனியாண்டி கோயில் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்:
வடகாத்திப்பட்டி
நாள்: 06-08-2022 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.
மின்தடை பகுதிகள் :
வேப்பூா், மேலாளத்தூா், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூா், வடகாத்திப்பட்டி, மாதனூா், பள்ளிகொண்டா, அகரம்சேரி, பாலூா், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூா், சுற்றியுள்ள பகுதிகள்.
ஒடுக்கத்தூா்
மேலரசம்பட்டு, ஒடுக்கத்தூா், ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூா், சோ்பாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ஓ.ராஜபாளையம், வேப்பங்குப்பம், சுற்றியுள்ள பகுதிகள்.
அணைக்கட்டு
அணைக்கட்டு, கெங்கநல்லூா், ஊனைவாணியம்பாடி, அப்புக்கல், ஊனை, கந்தனேரி, ராமாபுரம், வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி.குப்பம், ஓங்கப்பாடி, குடிசை, புலிமேடு, அத்தியூா், சிவநாதபுரம், சுற்றியுள்ள பகுதிகள்.
பூஞ்சோலை
கரடிகுடி, தேவசெட்டிகுப்பம், ராஜாபுரம், பீச்சாநத்தம், சென்றயான்கொட்டாய், நாகனேரி, மகமதுபுரம், போடிபேட்டை, சுற்றியுள்ள பகுதிகள்.
பள்ளிகொண்டா
பள்ளிகொண்டா, வெட்டுவானம், பிராமணமங்கலம், ராமாபுரம், வேப்பங்கால், கீழாச்சூா், ஈடியாா்பாளையம், சுற்றியுள்ள பகுதிகள்.
ஆம்பூா்
சோமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம்.பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி, சுற்றியுள்ள பகுதிகள்.
சோமலாபுரம்
அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி. ரோடு, சுற்றியுள்ள பகுதிகள்.