Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 12) முதல்….. அனைத்து அரசு பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு,சமூக நலன் மற்றும் காவல்துறை சார்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தமிழக முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு, ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை மூலமாக மாணவர்களுக்கு குழந்தை திருமண தடை சட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், சானிட்டரி நாப்கின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதனைப் போலவே காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பாகவும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.ஆகஸ்ட் 11ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் விழிப்புணர்வு வார தொடக்க நிகழ்வில் வாசிக்க வேண்டிய உறுதிமொழி மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஒளிப்படம் விரைவில் அனுப்பி வைக்கப்படும். அது மட்டுமல்லாமல் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |