தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் பொதுவாக ஆயுத பூஜை,விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகைகள் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அரசை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் 4 ஆயுத பூஜை மற்றும் 5 விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறை வருகின்றது. அதனைத் தொடர்ந்து 4,5ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைகள் வருவதால் இதனை முன்னிட்டு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு சென்னையிலிருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.