தேனி
பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகுளத்தில் உயரழுத்த மின்பாதை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றிகளை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.
எனவே, 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், பட்டாபுளி தெரு, காயிதேமில்லத் நகா், கீழ வடகரை காந்திநகா், பங்களாபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மதுரை
வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் ராயபுரம் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். இதனால் மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி சோழவந்தான் மோகன் பிளாட், ரிஷபம், திருமால் நத்தம், ஆலங்கட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா பகுதியில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் மற்றும் தேவசேரி பீடர், வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் ராயபுரம் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதனால் மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி சோழவந்தான் மோகன் பிளாட், ரிஷபம், திருமால் நத்தம், ஆலங்கட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா பகுதியில் மின்தடை ஏற்படும் .
தூத்துக்குடி
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, விஜயாபுரி, எப்போதும் வென்றான், எம். துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி உப மின் நிலையங்களில் 29ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கிறது. எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரங்கள், மற்றும் கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது .
நெல்லை
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் துணை மின் நிலையங்களில் 29ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் வி.மு.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரகுமத் நகர், நீதிமன்றம் பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மனப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜ நகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன் குறிச்சி மற்றும் மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈசுவரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி பகுதி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கத்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருவள்ளூர்
திருத்தணி – சித்துார் சாலை மற்றும் பைபாஸ் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றும் பணி, மாற்று இடத்தில் நடவு செய்யும் பணிகள், 29ஆம் தேதி சனிக்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், திருத்தணி நகரத்தில் சென்னை பைபாஸ், செங்குந்தர் நகர், ஏரிக்கரை, கீழ்வீதி, குமரன் தெரு, கம்பர் தெரு, சுப்ரமணியம் நகர் மற்றும் ரூபி கான்வென்ட் தெரு ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் சப்ளை நிறுத்தப்பட உள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின்நிலைய அலகு 4-ல் மாதந்திர பராமரிப்பு காரணமாக 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஒருபகுதி, பெத்திக்குப்பம், காயலார்மேடு, சின்ன ஒபுளாபுரம், எனாவூர் பஜார், சுண்ணாம்புகுளம், திப்பன்பாளையம், கும்புளி, கொண்டமாநல்லூர், பூவலை, ஆரம்பாக்கம், நொச்சிக் குப்பம், தண்டலம், நாயுடுகுப்பம், ஏகுமதுரை, தோக்கம்பூர், சிந்தலகுப்பம், சித்தராஜகண்டிகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என கும்மிடிப்பூண்டி சிப்காட் மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்து உள்ளார்.
மயிலாடுதுறை
மணல்மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க இருப்பதால் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி மணல்மேடு, ராதாநல்லூர், கடலங்குடி, ஒழுகமங்கலம், காளி இளந்தோப்பு, பட்டவர்த்தி, திருச்சிற்றம்பலம், வடுகப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
நாகை
வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 29ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாரண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிப்புலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருக்குவளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு 29ஆம் தேதி சனிக்கிழமை பணி நடைபெற உள்ளது. எனவே திருக்குவளையிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருக்குவளை, சமத்துவபுரம், வலிவலம், சாட்டியகுடி, வண்டலூர், கார்குடி, நால்ரோடு, மணலி, வாழக்கரை, மீனம்பநல்லூர், செம்பியன்மாதேவி, சோழவித்யாபுரம், எட்டுக்குடி, ஈசனூர் மற்றும் பழையாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.