தமிழகம் முழுவதும் 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம்.
நேற்று முதல் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது காலை 9.30மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெறும். இதில் அனைவரும் சென்று பயனடைந்து கொள்ளலாம்.