தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது.
அவ்வகையில் தமிழகத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 30 நாட்கள் பள்ளி வராத குழந்தைகளையும் பள்ளி படிப்பை பாதையில் நிறுத்திய குழந்தைகளையும் கணக்கெடுக்கும் பணி தமிழக முழுவதும் இன்று முதல் தொடங்குகின்றது. இதற்காக ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு குழு வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி பள்ளி குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் பெற்றோரிடம் பேசி பள்ளியில் அல்லது சிறப்பு வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.