Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(டிச..23)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்…!!!!

கன்னியாகுமரி

கொட்டாரம் உபகோட்டத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் பிரிவில் வழுக்கம் பாறை மின்பாதையில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையாட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆதலவிளை பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி விரை மின்வினியோகம் இருக்காது.

மதுரை

கொட்டாம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை)
கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, வி. புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரிய கிழக்கு செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் மின்கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தங்குடி பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) உயர் அழுத்து மின் பாதையில் பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் சாத்தங்குடி, கண்டு குளம், காண்டை, அம்மா பட்டி, பன்னீர்குண்டு, போல் நாயக்கன்பட்டி, புல்மாத்தூர், மற்றும் கிழவனேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் மின் செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

சோழவந்தான் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோழவந்தான், தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், அச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை

புதுப்பட்டி, ஆதனக்கோட்டை, பழைய கந்தர்வகோட்டை, மங்களாகோவில் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, வடுகப்பட்டி, மங்கனூர், பிசானத்துார், துருசுப்பட்டி, மெய்குடிப்பட்டி, அக்கச்சிப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி, ஆதனக்கோட்டை, மின்னாத்துார், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழ மங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சேலம்

எட்டிக்குட்டைமேடு துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. கன்னந்தேரி, கச்சுப்பட்டி, ஏகாபரம், தைலாம்பட்டி, இடங்கணசாலை, எருமைப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

நாமக்கல்

ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. ஏமப்பள்ளி, விட்டாம்பாளையம், ஏ கைலாசம்பாளையம், பெருமாம்பாளையம், கோரக்குட்டை, அணிமூர், பிரிதி, பன்னீர்குத்தி பாளையம், பட்லூர், இறையமங்கலம், சாலப்பாளையம், வேப்பம்பாளையம், நைனாம்பாளையம் ஆகிய பகுதிகள் மின்தடை ஏற்படும்.

Categories

Tech |