Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணி வரை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும். கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளது.அதனால் தமிழகம் முழுவதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் போலியோ சொட்டு மருந்து நடைபெறும் முகாமுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |