தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடை, மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து மீதி எதுவும் இயங்காது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டுப்பாடு, உத்தரவு அமலுக்கு வந்தது.இதனால் தமிழகம் முழுவதும் இ-பாஸ் இன்றி வாகனங்களிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலோ, மாவட்டத்திற்குள் பயணித்தாலோ அவர்களை தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் மக்கள் வெளியே சுற்றாமல் இருக்க டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.