கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு வரை சில தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் அனைவரும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில இன்னும் அமலில் உள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு வரை சில தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8 முதல் வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் நேரக் கட்டுப்பாடு இன்றி முழுமையாகச் செயல்படும்.உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வகையில் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள், இன்று முதல், நடத்த அனுமதிக்கப் படுகின்றன.
மேலும் திரையரங்குகள் 100% இருக்கையுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளை 50% இருக்கையுடன் நடத்தலாம். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்தலாம்.