தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. இதனையடுத்து ஏப்ரல் 4 ஆம் தேதி காலையிலிருந்தே மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி தேர்தல் தேர்வு முடிவுகள் அறிவிக்கும் நாள் அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.