தமிழகம் முழுவதிலும் இன்று மற்றும் நாளை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று தெலுங்கு பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பொது விடுமுறை நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்பட உள்ளதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.