தமிழகம் முழுவதும் இன்று 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்று 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.