தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வில்லை.
இந்நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் இன்று 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.அசைவப் பிரியர்கள் மற்றும் மது குடிப்போர் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருப்பதால் அவர்கள் தடுப்பூசி போடும் விதமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.