தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மக்கள் பதற்றமடைந்து கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியை பின்பற்றும் படியும், உதவிக்கு காவல்துறையினரை அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.