தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மேலும் நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளான இன்று தமிழகமெங்கும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை 2000 வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. டோக்கன் பெற்றோர்கள் மட்டும் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.