தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை 2000 வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.அதன்படி டோக்கன் பெற்றவர்கள் மட்டும் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.