தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக மின் பராமரிப்பு பணிக்காக ஓரிரு இடங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இனிமேல் உறுதியாக மின்தடை இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும். புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.