தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. உயர்கல்வி செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், தற்போது அரசு தேர்வு துறை இயக்ககம் இது சார்ந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
பிளஸ் டூ மாணவர்கள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு 24-ஆம் தேதி ( இன்று ) முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையமாகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.