தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கியது. அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா நிவாரண தொகை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.