தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டாவது வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் இடங்களில் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி சேர்த்துக் கொள்பவர்களுக்கு பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பரிசுகளும் உண்டு. இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.