Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மக்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழ்நாட்டில் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 28,91,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 11,43,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மூன்றாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருக்கிறது.

மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கையிருப்பு உள்ளவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 1600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி கையிருப்பு அதிகப்படுத்தும் வகையில் திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Categories

Tech |