மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.