Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. கோவில்களில் தடை…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்களில் மக்கள் வழக்கம் போல் கோவிலுக்கு செல்லலாம். இந்நிலையில் இன்று மகாளய அமாவாசை என்பதால் கோவில்களுக்குச் செல்லவும் புண்ணிய தீர்த்தங்களில் தர்பணம் செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.

மகாலய அமாவாசை அன்று புண்ணிய தலங்களுக்குச் சென்று நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழகம் முழுவதும் மகாலய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியவில்லை என்று அதிருப்தியில் உள்ளனர்.

Categories

Tech |