தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ஆம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து வகை பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்களுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது B.E, B.Tech கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப் பட்ட மாணவர்கள் தொடர்புடைய கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்களா? இல்லையா? என்று விவரத்தை இன்று மாலைக்குள் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.