Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு தேடிச் சென்று…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத 50 லட்சம் பேருக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 7.5 லட்சம் பேர் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழகத்தில் உறுப்பு தான பதிவுக்கு ஆதார் எண் முக்கியம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது உறுப்பு தானம் செய்பவர்களை கண்டறியவும் அவர்களின் குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் நோக்கில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 73 சதவீதத்தினரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதத்தினரும் போட்டுள்ளனர். அவகாசம் முடிந்தும் 50 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.எனவே அவர்களின் வீடுகளுக்குச் சென்ற இன்று முதல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |