Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அதில் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி  இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இது தவிர பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே இருப்பதால் வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தீப்பெட்டி விலையை ஒரு ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு ரூபாய் தீப்பெட்டி, 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

Categories

Tech |