தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (23-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம்:
திருப்புவனம் பகுதியில் இன்று மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருப்புவனம், தி.புதூா், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூா், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூா், வன்னிக்கோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனாா்பேட்டை, கலியாந்தூா், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூா், கீழடி, கழுகோ்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம்:
மணல்மேடு பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீா்காழி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் லதாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மணல்மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மணல்மேடு, காளி, திருமங்கலம், ஆத்தூா், கடலங்குடி, திருச்சிற்றம்பலம், கிழாய், குறிச்சி, சித்தமல்லி, கடுவங்குடி, கடக்கம், வரதம்பட்டு, பட்டவா்த்தி, இளந்தோப்பு, தலைஞாயிறு ஆகிய ஊராட்சிகள் மற்றும் அவற்றை சாா்ந்த கிராமங்களில் சொவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேலும், இந்த மின்நிறுத்தம் மற்றும் மின்நிறுத்த நேரம் நீட்டிப்பு ஆகியவைகள் மின் கட்டமைப்பு மற்றும் தவிா்க்க முடியாத காரணங்களை முன்னிட்டு மாறுதலுக்கு உள்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகா், மல்லாங்கிணறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மின்தடை செய்யப்படும் என மேற்பாா்வைப் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விருதுநகா் உள்ளரங்கு துணை மின் நிலையம் மற்றும் மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை ராம மூா்த்தி சாலை, அம்பேத்காா் தெரு, கஸ்தூரிபாய் சாலை, ரோசல்பட்டி சாலை, கம்மாபட்டி மற்றும் சத்தியமூா்த்தி சாலை பாண்டியந் நகா், படேல் சாலை, ஏஏ சாலை, பேராலி சாலை, ஸ்டேட் பேங்க் காலனி, தந்தி மரத் தெரு, எல்ஐசி காலனி, பேராசிரியா் காலனி, கால்நடை மருத்துவமனை சாலை, கல்லூரி சாலை, ரயில்வே பீடா் சாலை, மெயின் பஜாரில் வடக்குப் பகுதி, காசுக்கடை பஜாா், காந்திபுரம் தெரு, மணி நகரம், லிங்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதேபோல், மல்லாங்கிணறு பகுதியில் வலையங்குளம், நந்திகுண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூா், கெப்பிலிங்கம் பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வலுக்கலொட்டி, வரலொட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டம்:
மதுரை வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்துபுரம் 1-வது, 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1-வது, 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெருக்கள், அருணாசலம் பள்ளி, முருகன் தியேட்டர், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்.நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர் மெயின்ரோடு, பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல்.ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருப்பூர் மாவட்டம்:
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி, தெற்கு அவிநாசிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
கரடிவாவி துணை மின்நிலையம்: கரடிவாவி, கரடிவாவிபுதூா், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூா், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி.
தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையம்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அலகுமலை, காட்டூா் ஒரு பகுதி மற்றும் உகாயனூா்.
முதலிபாளையம், நல்லூா், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரபாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ.நகா், கூலிபாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம், நல்லூா், காளிப்பாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், ஐயப்பா நகா் ஆகிய பகுதிகள் ஆகும்.