தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளையும், பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கி வந்த சென்னையில் தனி கவனம் செலுத்திய தமிழக அரசு, அங்கு உள்ள 15 மண்டலங்களையும் தனித்தனியே பிரித்து சிறப்பு அதிகாரிகளை நியமித்தது.
மேலும் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து, கொரோனா தடுப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இன்றைய பாதிப்பில் கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு பின்பு இன்று தான் சென்னையில் 1200 க்கும் கீழ்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.
அந்த வகையில்தான் இந்த ஒரு மாதம் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்படுள்ளது. அதில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு முடக்கம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில்,
தமிழகம் முழுவதும் இரவு 12 மணி முதல் ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாளை ஒருநாள் மதுக்கடைகள், காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள், செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகள், பெட்ரோல் பங்குகள் செயல்படாது. மருத்துவமனைகள், மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.