Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளுக்கு…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

கடந்த வாரம் கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட 3 மாணவிகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஷவர்மா உணவு கடைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட இறைச்சி கடைகளை விற்பனை செய்யும் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சமைக்காத இறைச்சியை 18 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும். அசைவ உணவுகளை 70 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும். இறைச்சியில் செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |