Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இலவச பேருந்து கட்டணம் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டம் இன்று அமலுக்கு வந்தது.

மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அரசு நகரப் பேருந்துகளில் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லும் மகளிர் மட்டும் உயர்கல்வி பயிலும் மாணவிகள் உட்பட அனைத்து மகளிருக்கும் அரசு பேருந்துகளில் கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |