திருச்சி அருகில் உள்ள பொத்தமேட்டுபட்டி யில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் கீழ் இதுவரை 80 ஆயிரம் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அதனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை கற்றல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. அதனால் கல்வி தொலைக்காட்சி மற்றும் பாடங்கள் பதிவு செய்யப்பட்ட 8000 வீடியோக்கள் மூலம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.