Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடியில் வருகின்ற 10ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 68 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று அன்னிய முதலீடுகளை பெற்று திரும்பிய தமிழக முதலமைச்சர் அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்துள்ளார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |