Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு முன்னுரிமை….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இந்நிலையில் மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி போட முன்னுரிமை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என்றும்,மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து மூன்று நாளில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |