தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு முன்னதாக புத்தகங்கள் மட்டுமே வழங்குவதற்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அதே சமயத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகளவில் பரவி வந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசின் தீவிர நடவடிக்கைகளின் விளைவால் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதன்பின் பள்ளிகள் திறந்ததை தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு தொற்று நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியது.
முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 -12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதன் விளைவுகளின் அடிப்படையில் நவம்பர் 1ஆம் தேதி 1 -8ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில் வழக்கமாக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு, பின் ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில் கொரோனா 3-ம் அலை தாக்குதல் ஜனவரி மாத தொடக்கம் முதல் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கி இருப்பதால் ஜனவரி 31ம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு நேரில் கட்டாயம் வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. தற்போது ஜனவரி 22 (இன்று ) சனிக்கிழமை ஆசிரியர்களுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.