Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இ-சேவை மையங்களில் இலவசம்…. அதிரடி அறிவிப்பு…!!!

18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களில் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து 342 இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டம் வரும் அக்டோபர் 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |