மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 134க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கூடுதலாக பல சேவைகளை இணைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மேலும் பல சேவைகளை இணைக்கும் வேலையானது நடைபெற்று வருவது. இது குறித்து தமிழக மின் ஆளுமை முகமை இயக்கக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் 42 புதிய சேவைகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே மக்கள் விரைவில் 176 சேவைகளை இ சேவை மையம் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.