தமிழகத்தில் நாளையோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கடந்த பொதுமுடக்கத்தில் இருந்தது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முடக்க உத்தரவு இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம். வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். காய்கறிகள், மளிகைக் கடைகள் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி.இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.