திருநெல்வேலியில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இ-பாஸ் ரத்து செய்வது என்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்படி பரவியது என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கொரோனா ஒன்றுமே இல்லாமல் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தற்போது பரவி விட்டது.
பொது போக்குவரத்து ஏற்கனவே மண்டல வாரியாக விடப்பட்டது. என்ன ஆயிற்று ? கூடுதலாக தொற்று பரவி விட்டது. இப்போது படிப்படியாக குறைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஒரு அளவுக்கு குறைந்த உடனே இயல்பு நிலைக்கு வந்தவுடன் பொது போக்குவரத்து விடப்பட்டு, இ-பாஸ் தடை செய்யப்படும்.
இப்போது இ-பாஸ் எளிமையாக கிடைப்பதற்கு இரண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் அத்தியாவசிய பணிக்கு முறையாக விண்ணப்பித்தால் அவர்களுக்கு எளிதாக கிடைத்துவிட அரசு வழிவகை செய்துள்ளது. அதுமட்டுமல்ல தொழிற்சாலைகளில் பணி புரிகின்ற தொழிலாளர்களிடம் பட்டியலை நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து அதற்கு அனுமதி அட்டை வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று முதல்வர் தெரிவித்தார்.