Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்…. நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை…!!!!!!

தென்னிந்தியாவின் மிகவும் பழமையான செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததாக சொல்லப்படும்  நிகழ்வை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ஈஸ்டர் பண்டிகையைமுன்னிட்டு, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள தென்னிந்தியாவிலேயே மிகவும் பழமையான செயிண்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.

மேலும் உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதில், தமிழகம் மட்டுமல்லாமல்  வெளிமாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மேலும் இந்த பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்ரூபமாக நடைபெற்றது.

Categories

Tech |