தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடும் ஊரடங்கு பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடையைத் தவிர இதர செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் வழிபாடு தலங்கள் அனைத்தும் இன்றும் நாளையும் மூடப்படும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளது. அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை செய்யுப்பட்டுள்ளது.