தமிழகத்தில்நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு அரசின் சார்பாக அனைத்து உதவிகளையும் முழுமையாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் கிடக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ஜாதி சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.அது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு இவை அனைத்தும் கிடைத்திட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர் கலைக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், நரிக்குறவர்,பழங்குடியினர் மற்றும் இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் பகுதிகளை நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் .அந்தப் பகுதிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு களையும் சம்பந்தப்பட்ட துறைகள் திட்டங்கள் வாரியாக அளிக்க பயன்களை கண்டறிந்து பட்டியலிட வேண்டும்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அரசின் சார்பாக மேற்கொள்ளக்கூடிய அனைத்து உதவிகளும் முழுமையாக கிடைக்க வேண்டும். இந்த பணியினை மேற்கொள்ள ஒரு தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.