தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மாதம் ஒருமுறை சமையல் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் காய்கறி விலை மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வு பேர் அதிர்ச்சியை தந்துள்ளது. தங்கம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து டீ மற்றும் காபி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்ந்தது. அதனால் சாமானிய மக்களின் அன்றாட செலவுகள் அதிகரித்து உள்ளன. இதனைத் தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி உணவு பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு மற்றும் சமையல் எண்ணெய் உயர்வு போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுகளின் விலையை உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி உணவுகளின் விலை 10% முதல் 20% வரை உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.