தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை தவறாமல் பின்பற்றப்படும்.1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வருகின்ற 17 ஆம் தேதி அன்று முதல் நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் எந்த குழப்பமும் இல்லை. தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை இணையம் மூலம் நடைபெறும். கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்று விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இலவச கட்டாய கல்வி சட்டம் 2009ன் படி தனியார் பள்ளிகளில் எல்கேஜி ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை இணையதளத்தின் மூலமாக பெற்றோர்கள் விண்ணப்பம் செய்ய மெட்ரிக் பள்ளி இயக்குனர் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.