Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – அதிரடி காட்டிய தமிழக அரசு …!!

தமிழகத்தில் வரும் எட்டாம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக 10 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி மருத்துவக்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் வரும் எட்டாம் தேதி முதல் கலைக்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து வகுப்புகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கல்லூரிகள் திறப்பதற்கான உத்தரவை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டார்.

அதன்படி, பட்டயப் படிப்புகள், இளநிலை, முதுநிலை படிப்புகளில் அனைத்து வகுப்புகளும் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுத் தடுப்புக்கான நிலையான செயல்பாட்டு அறிவுறுத்தல்களின்படி சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கல்லூரிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கான பாடங்கள் நடத்துதல், செய்முறை வகுப்புகள் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |