செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 174 மாணவியர்களுக்கு 5000 ரூபாய் என்ற விதத்தில் இந்த உதவித்தொகை வழங்கி இருக்கிறார்கள். இது மட்டுமல்ல ஏற்கனவே ஒரு 200 பேருக்கு வழங்கி இருக்கிறார்கள். இது இல்லாமல் ஒரு மிகப்பெரிய செயலாக கிட்டத்தட்ட ஒரு 1,500 மாணவியர்களுக்கு இதுபோன்ற உதவித்தொகை வழங்க அவர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள், மிக விரைவில் அதற்கான அறிவிப்பு, அதற்கான நிகழ்வும் எந்த மாவட்டத்தில் சொல்கின்றார்களோ அந்த மாவட்டத்தில் நடைபெறும்.
பொதுவாக நம்முடைய என்.ஜி.ஓ யாராக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் கம்பெனியாக இருந்தாலும் சி.எஸ்.ஆர். ஆக்டிவிட்டி மூலமாக தயவு செய்து அந்தந்த பகுதியில் இருக்கின்ற பள்ளிக்கூடங்களுக்கு குறிப்பாக அதன் கட்டமைப்பாக இருந்தாலும் சரி, அதே போன்று நம்முடைய மாணவ செல்வங்களுக்கான உதவி தொகையாக இருந்தாலும் சரி அதை நீங்கள் வழங்க வேண்டும் என்கின்ற அந்த கோரிக்கையை இன்றைக்கு நம்முடைய பத்திரிக்கை துறை, ஊடகத் துறை நண்பர்கள் வாயிலாகவும் தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற அனைவருக்கும் நான் தெரிவிக்க, வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
அதே போன்று ஒவ்வொரு பள்ளியும் படித்த பழைய மாணவர்கள் இன்றைக்கு ஒவ்வொரு நல்ல உத்தியோகத்தில் நல்ல ஒரு பதவியில் இருக்கக்கூடிய நீங்களும் நாம் படித்த பள்ளிக்கு உங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் நான் முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.