சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கலுக்கான 2 நாட்கள் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பேசிய பன்னீர்செல்வம், இன்று தேர்தல் நடந்தால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கூறியுள்ளது. இனி வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை என அனைத்து தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் நிலையை உருவாக்க வேண்டும். கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாது என்று நாங்கள் அப்போதே கூறினோம். இப்போது கொடுத்த கோரிக்கைகள் குறித்து கூறினால், காதில் வாங்காதது போல் உள்ளனர் என்று அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பேசி எடப்பாடி பழனிசாமி, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுத்தது போல் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த தேர்தலில் மக்களுக்கு நம் மீது கோபமோ,எதிர்ப்போ இல்லை நான் உழைப்பு குறைந்ததால் கடந்த தேர்தலில் தோற்று எதிர்க்கட்சி ஆகிவிட்டோம். அரசு ஊழியர்கள் கூட தவறு செய்துவிட்டோமோ என்று யோசிக்கத் தொடங்கி உள்ளனர். திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்திலேயே தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி விட்டது. அதுமட்டுமில்லமல் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் தான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே அந்த திட்டங்களை முறையாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். திமுக அரசு எல்லா துறைகளிலும் தூங்கிக் கொண்டு இருக்கிறது