Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு…. அரசு கடும் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். மதுரையில் ஒரே நேரத்தில் ரேஷன் ஊழியர்களை பணி மாறுதல் செய்துள்ளோம். மேலும் நிதியே இல்லாத நேரத்தில் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |